வியாபாரி என்றால் இதெல்லாம் சகஜம் தான்: விவி மினரல்ஸ் வைகுண்டராஜன்

 

வியாபாரி என்றால் இதெல்லாம் சகஜம் தான்: விவி மினரல்ஸ் வைகுண்டராஜன்

வியாபாரி என்றால் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான் என்று விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: வியாபாரி என்றால் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான் என்று விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் வைகுண்டராஜன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 25-ஆம் தேதி முதல் சோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த வைகுண்டராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், தமக்கு பசிப்பதால் விரைவில் செல்ல வேண்டும் எனக் கூறி காரை நோக்கிச் சென்றார்.

அதன்பின் வேறு வழியின்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வியாபாரிகளாக இருந்தால் வருமான வரித்துறை சோதனைகள் சகஜம் தான். தொழில் போட்டியால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை” என கூறியுள்ளார்.