“விமானத்தை சரியா லேண்டிங் பண்ணல!” – மங்களூரில் விமானிகள் பணியிடை நீக்கம்

 

“விமானத்தை சரியா லேண்டிங் பண்ணல!” – மங்களூரில் விமானிகள் பணியிடை நீக்கம்

விமானத்தை ஓடுபாதையில் சரியாக தரையிறக்காத விமானிகள் நான்கரை மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு: விமானத்தை ஓடுபாதையில் சரியாக தரையிறக்காத விமானிகள் நான்கரை மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மங்களூர் விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் ஓடுபாதையில் மிகவும் அபாயகரமான முறையில் விமானத்தை தரையிறக்கினர். இதனால் விமான ஓடுபாதையில் இருந்த மூன்று தரையிறக்க வழிகாட்டி விளக்குகள் சேதமடைந்தன.

ttn

இந்த சம்பவம் விசாரணை விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்து வந்தது. அதைத் தொடர்ந்து, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விமானத்தை தரையிறக்கிய குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் நான்கரை மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.