விமானத்தைப் போல அதிநவீன வசதிகளுடன் சொகுசான ஆட்டோ சவாரி…! பயணிகளிடையே பயங்கர வரவேற்பு!

 

விமானத்தைப் போல அதிநவீன வசதிகளுடன் சொகுசான ஆட்டோ சவாரி…! பயணிகளிடையே பயங்கர வரவேற்பு!

‘ஆட்டோகாரன்… நான் ஆட்டோகாரன்…’ என்று தலைவர் பாடும் பாட்டுக்கு தியேட்டரே விசில் சப்தத்தில் குலுங்குமே… அப்படி நாடு முழுவதும் பொதுமக்களிடையே பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். எத்தனை தான் ரயில்களும், பேருந்துகளும் பயணங்களை எளிதாக்கினாலும், பெயர் தெரியாத ஊரில் வழி கேட்பதில் துவங்கி, கடைசி பஸ் எத்தனை மணிக்கு என்று விசாரிக்கும் வரையில் ஆட்டோ ஓட்டுநர்களின் பங்கு பெரிது.

‘ஆட்டோகாரன்… நான் ஆட்டோகாரன்…’ என்று தலைவர் பாடும் பாட்டுக்கு தியேட்டரே விசில் சப்தத்தில் குலுங்குமே… அப்படி நாடு முழுவதும் பொதுமக்களிடையே பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். எத்தனை தான் ரயில்களும், பேருந்துகளும் பயணங்களை எளிதாக்கினாலும், பெயர் தெரியாத ஊரில் வழி கேட்பதில் துவங்கி, கடைசி பஸ் எத்தனை மணிக்கு என்று விசாரிக்கும் வரையில் ஆட்டோ ஓட்டுநர்களின் பங்கு பெரிது. அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் துவங்கி, மழைக் காலங்களில் சமூக சேவையில் ஈடுபடுவது வரையில் நாடு முழுவதுமே ஆட்டோ ஓட்டுநர்கள் மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தனது ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகள், விமானத்தில் கிடைக்கும் சொகுசுகள் அத்தனையையும் அனுபவிக்க வேண்டும் என்று அதிநவீன வசதிகளை தனது ஆட்டோவில் ஏற்படுத்தியிருக்கிறார் மும்பையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சத்யவான் கீதே. 

auto

இவர் தனது ஆட்டோவில் மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான வசதி, டெஸ்க்டாப் கணினி வசதி, சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுவதற்கான வாஷ் பேஷன் தொட்டி, ஆட்டோ உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு  காற்று தருவதற்காக மின்விசிறி என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசனையுடன் அமைத்திருக்கிறார்.

auto

ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், கம்ப்யூட்டர் திரையில் உடற்பயிற்சிக்கு தேவையான எளிய ஆலோசனைகள் ஓடுகின்றன. ஆட்டோவின் பின்புறம், விமானத்தில் பயணிக்கும் அனுபவம் பெற்றிடுங்கள்’ என எழுதியும் வைத்துள்ளார். தனது ஆட்டோவில் சவாரி செய்யும் மூத்த  குடிமக்களுக்கு 1 கி.மீ. வரையிலான பயணத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை, பிரசவத்திற்கு இலவசம், பள்ளிக் குழந்தைகளுக்கு பாதி கட்டணம் என்று அதிரடி சலுகைகளையும் வழங்கி வருகிறார் சத்யவான்!