விபத்துக்கான இழப்பீடு தராததால் அரசு பேருந்து ஜப்தி!

 

விபத்துக்கான இழப்பீடு தராததால் அரசு பேருந்து ஜப்தி!

விபத்துக்கான இழப்பீடு தாரததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்துக்கான இழப்பீடு தாரததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாச்சியூரைச் சேர்ந்தவர் அருள்குமார் (28). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி ஆம்னி வேனில் கோவை – சத்தியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருள்குமாரின் பெற்றோர் பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் அரசு பேருந்தின் மீது தப்பு இருப்பதால் அருள்குமாரின் பெற்றோருக்கு ஒன்பது லட்சத்து இரண்டாயிரத்து 600 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 7 வருடங்களுக்கு மேல் ஆகியும் நஷ்ட ஈடு தொகையை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் அருள்குமாரின் பெற்றோருக்கு ஆதரவாக பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் திருப்பூர் – குருவாயூர் செல்லும் அரசுப் பேருந்து ஜப்தி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.