விபத்தில் தலைக்கீழாக கவிழ்ந்த ஆம்புலன்ஸ்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கர்ப்பிணி!

 

விபத்தில் தலைக்கீழாக கவிழ்ந்த ஆம்புலன்ஸ்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கர்ப்பிணி!

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சந்திராவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்ப்படவே அவர், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகாந்த்-சந்திரா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சந்திராவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்ப்படவே அவர், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக தெரிவதால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி கூறியுள்ளனர். அதனையடுத்து, ஆம்புலன்ஸில் சந்திராவும் அவரது உறவினர் ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ttn

அந்த ஆம்புலன்ஸ், கம்பரசம்பேட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே ஒரு கார், ஆம்புலன்ஸை உரசியது போல சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த கர்ப்பிணி உயிர் பிழைத்திருக்கிறார். அதனையடுத்து அவர் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எதிரே வந்த அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்தவரின் மனைவிக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ttn

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜீயபுரம் போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு ஆம்புலன்ஸை ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது, ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் ஆகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸில் இருந்து உயிர் பிழைத்த அந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.