விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை!

விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை!

சென்னையில் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

சென்னையில் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளிலும் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி பேனர் வைக்க திட்டமிட்டிருந்தால் 2 நாட்களுக்கு முன்னதாகவே படிவம் 1- ஐ பூர்த்தி செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு அனுமதிக்கும் அனுமதி கட்டணம் 200 ரூபாய்க்கான வரைவோலை மற்றும் ஒவ்வொரு அனுமதிக்கும் காப்பீட்டுத் தொகை 50 ரூபாய்க்கான வரைவோலையை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி பெயரில் பெற்று சமர்பிக்க வேண்டும்.

Banner

இவ்வாறு செய்யாமல் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.