விண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா !!

 

விண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா !!

விண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா !!
விண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், விண்டீஸ் அணியும் மோதுகின்றன. 

ind vs wi

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு இடம் அளிக்கப்படவில்லை, அதே போல் விஜய் சங்கரும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர். 
விண்டீஸ் அணியில் இருந்து ஈவின் லீவிஸ் மற்றும் ஆஸ்லே நர்ஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுனில் ஆம்ப்ரிஸும், ஃபேபியன் ஆலனும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 
இந்திய அணி; 
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ். 

india

விண்டீஸ் அணி; 
கிரிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெய்ட்மர், ஜேசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வொய்ட், ஃபேபியன் ஆலன், கீமர் ரோச், செல்டான் காட்ரல், ஓஸ்னே தாமஸ்.