விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகள் திடீர் மாயம்!

விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகள் திடீர் மாயம்!

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வு பயிற்சிக்காக படித்து வந்த 2 மாணவிகள் மாயமானதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வு பயிற்சிக்காக படித்து வந்த 2 மாணவிகள் மாயமானதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

சென்னை, தேனாம்பேட்டை யாழ் முதல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி, செங்கல்பட்டைச் சேர்ந்த கீதாஞ்சலி இருவரும் தங்கி நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விடுதியில் இருந்து வெளியே சென்றவர்கள் காணவில்லை என்று அவரது பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களாக நீட் தேர்வு பயிற்சிக்காக தனியார் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு மாணவிகள் மாயமானது தொடர்பாக அவர்கள் விடுதியில் இருந்து வெளியேறிய சிசிடிவி பதிவுகளை வைத்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி அனுஷா மற்றும் ஒரு வயது பெண் குழந்தை, எம்.ஏ கார்டன் பகுதியில் வசித்து வந்த சித்ர பிரியா என்ற பெண் தனது 13 வயது மகள், 11 வயது மகனுடன் காணாமல் போனது குறிப்பிடதக்கது.