விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோதமான இயக்கமாக அறிவிப்பு !

 

விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோதமான இயக்கமாக அறிவிப்பு !

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து   இயக்கத்தைச் சட்ட விரோதமான இயக்கம் என்றும் இந்த இயக்கத்திற்கு இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்

இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் வரும் 2024 ஆண்டு வரை நீட்டித்தது. இந்த தடை நீட்டிப்பு குறித்து எந்த ஆட்சேபனையும் இருந்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாய விசாரணையின் போது தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

​    ​தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்

அதனையடுத்து, புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமையில் மதுரையில் நடந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில் மதிமுக கட்சித் தலைவர் வைகோ ஆஜராகி விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் குறித்து அவரது கருத்துக்களைத் தெரிவித்தார். இந்நிலையில், இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா முழுவதும் தடைவிதித்து, அதனை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.