விடாமல் துரத்தும் கிரிக்கெட்: மீண்டும் பேட்டை எடுக்கும் விஷ்ணு விஷால்!

 

விடாமல் துரத்தும் கிரிக்கெட்: மீண்டும் பேட்டை எடுக்கும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘ஜெர்ஸி’. இயக்குநர் கெளதம் தின்னானுரி இயக்கியிருந்த அதில், நானி, ஷ்ரதா ஸ்ரீநாத், சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 36 வயதில் கிரிக்கெட்டின் உச்சத்திலிருந்து விலகிய வீரர் ஒருவர் தனது மகனின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வதற்காக மீண்டும் பேட்டைத் தூக்கியது தான் ஜெர்ஸியின் கதை.

இந்த நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நானியின் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாகவும், படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அது  முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

vishnu vishal

முன்னதாக விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஜீவா’ என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.