விஜய் வீட்டில் எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை…ரசிகர்கள் உற்சாகம்!?

 

விஜய் வீட்டில் எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை…ரசிகர்கள் உற்சாகம்!?

வீட்டிலிருந்து எந்த ஆவணங்களும் , பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.பின்பு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமானவரித்துறையினர்  நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதையடுத்து  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும்  பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 


 

இதையடுத்து வருமான வரித்துறையினர் 2 ஆவது நாளாக பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்கள் மற்றும்  விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வந்தனர். இதில் 300 கோடி ரூபாய் பிகில்  வசூலில் 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை  சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது.  அதேபோல் ஏராளமான சொத்து ஆவணங்கள், பின்தேதியிட்ட காசோலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

ttn

இந்நிலையில்  விஜய் வீட்டில்  கடந்த 23 மணிநேரம் நடைபெற்ற சோதனை நேற்றிரவு  நிறைவு பெற்றது.  தயாரிப்பாளரிடமிருந்து ஊதியம் வாங்கியது, அதன் மூலம் அசையா சொத்துக்களை வாங்கியது தொடர்பாக தான் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும், இருப்பினும் அவர் வீட்டிலிருந்து எந்த ஆவணங்களும் , பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். குறிப்பாக பிகில்  காட்சியில் ரௌடிகளை அடித்து விஜய் ஓடவிடுவதை வருமான வரித்துறை அதிகாரிகளாக சித்தரித்து அவர்கள் இணையத்தில் வைரலாக்கி  வருகின்றனர்.