விஜய் ரேஞ்சுக்கெல்லாம் அஜித் கிடையாது! கொளுத்திப்போட்ட நடிகை; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

விஜய் ரேஞ்சுக்கெல்லாம் அஜித் கிடையாது! கொளுத்திப்போட்ட நடிகை; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

‘இஷா கோபிகர்’ என்று பெயர் சொன்னால், இப்போதுள்ள இளம் ரசிகர்கள் கூகுளில் தேடிப்பார்க்கும் நிலையில் உள்ளவர்தான் நடிகை இஷா கோபிகர்.இருவது வருசத்துக்கு முன்னாள் ‘காதல் கவிதை’படத்தில் பிரசாத்துக்கு ஜோடியாக அறிமுகமான இந்தி நடிகை.

அதுக்கப்புறம் அரவிந்த் சாமியோடு ‘என் சுவாசக்காற்றே’ படத்திலும் விஜயோடு ‘நெஞ்சினிலே’ என்று சொல்லிக்கொள்ளும் படியாக சில  படங்கள் பண்ணியும் போனியாகாத காரணத்தால் இந்திப்பக்கம் திரும்பிப்போன நடிகைதான் இவர். இந்தியிலும் அதிரி புதிரியான படங்கள் எதுவும் இல்லை.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி பேட்டியின் போது ஒரு செய்தியாளர் அஜித், விஜய் இருவரையும் பற்றி கேள்வியெழுப்பியிருக்கிறார்.கடந்த இருபது ஆண்டுகளில் இந்தப்பக்கம் என்ன நடந்தது ,நடக்கிறது என்ற அப்டேட் எதுவும் தெரியாமல்  நம்ம கஸ்தூரி மாதிரி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்!

vijay

‘என்னோடு நடித்த ஹீரோக்கள் பலர் இன்னிக்கு பெரிய ஸ்டாரா இருக்காங்க. அரவிந்த் சாமி நல்ல நிலையில் இருக்கிறார்.விஜய்  வேற லெவல்ல இருக்கார். அஜித்கூட நான் நடிச்சதில்ல,ஆனாலும் அவரைப் பிடிக்கும்’என்று பதிலளித்த இஷா கோபிகர் அதோடு நிறுத்தியிருக்கலாம்!

thala

’விஜய்  வேற லெவல்ல இருக்கார்.ஆனால்,அஜித் அந்த ரேஞ்சுக்கு இருக்கிறாரான்னு எனக்கு தெரியாது!’என்று அடுத்து சொன்ன பதில்தான் ‘தல’ ரசிகர்களை இப்போது கொந்தளிக்க வைத்திருக்கிறது. 

இஷா கோபிகருக்கு,இது தேவையா!?