‘விஜய் ரசிகர்கள் ஒரு ஆர்வக்கோளாறுகள்’ அதிமுக அமைச்சர் விமர்சனம்!

 

‘விஜய் ரசிகர்கள் ஒரு ஆர்வக்கோளாறுகள்’  அதிமுக அமைச்சர் விமர்சனம்!

ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள்  ஆகியவை  சேதம் அடைந்தது

சென்னை: கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். 

bigfil

கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி ஒளிபரப்பவில்லை என விஜய் ரசிகர்கள்  ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள்  ஆகியவை  சேதம் அடைந்தது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். 

kadambur

இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக் கோளாறில் இப்படி செய்கிறார்கள். பிகில்  படக்குழு நிபந்தனையை ஏற்றதால்தான்  முதல்வரின் ஆலோசனையின் பேரில் சிறப்பு காட்சிக்கு  அனுமதி வழங்கப்பட்டது; என்றார்.