விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் தர்ஷன்! வைரலாகும் வீடியோ

 

விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் தர்ஷன்! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன், விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன், விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tharshan Dance ??? #tamilsonglyricss2

A post shared by TSL2.0 (@tamilsonglyricss2.0) on

 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் தர்ஷனும் ஒருவர். 90 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எதிர்பாராத விதமாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். தர்ஷன் எவிக்ட்  ஆனது பார்வையாளர்கள் மட்டுமல்ல கமலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தர்ஷன் வெளியேறியவுடன், வனிதா  விஜயகுமார்  டிவிட்டரில் , ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம் என்று பதிவிட்டார். பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளியாக சென்றபோது அந்த விமர்சனத்தை வனிதா நிறுத்தவில்லை.  

darshan

இந்நிலையில் தர்ஷனுக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் கதவை தட்டிக்கொண்டிருக்கையில், கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தர்ஷன் வெற்றிப்பெறாததற்காக வருத்தப்படவே இல்லை…மாறாக காதலியை சந்திப்பது, ஜாலியாக நடனமாடுவது என பொழுதை கழித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் நடன அசைவுகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார் தர்ஷன். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிவருகிறது.