விஜய் பட இயக்குநரை அவமானப்படுத்திய டிராஃபிக் போலீசார்: வீட்டிற்கு சென்று வருத்தம் தெரிவித்த சக காவலர்கள்!

 

விஜய் பட இயக்குநரை  அவமானப்படுத்திய டிராஃபிக்  போலீசார்: வீட்டிற்கு சென்று வருத்தம் தெரிவித்த சக காவலர்கள்!

இயக்குநர்  ரமணாவை அவமானப்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர்  ரமணாவை அவமானப்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை, ஆதி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் இயக்குநர்  ரமணா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அமைதியான வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரமணா, திடீரென்று  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ramana

அதில், காவல் உதவி ஆய்வாளர் குமரன் மற்றும் காவலர் ராமர் ஆகிய இருவரும் சென்னை சாந்தோமில் தனது காரை  மறித்து வேகமாக வந்ததாகக் கூறி அபராதம் கட்ட சொன்னதாகவும், அதை மறுத்தபோது, ‘ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது… உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்… , பாதியிலேயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று தகாத வார்த்தைகளால் பேசியதாக வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது வைரலானது.

ramana

இந்நிலையில் இந்த விவகாரம் டிஜிபி திரிபாதி கவனத்துக்குச் செல்ல, இயக்குநர் ரமணா வீட்டுக்கு சென்ற போலீசார் சிலர், உங்கள் மீது தவறில்லை. நாங்கள் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தோம். இனி இதுபோல் நடக்காது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் குமரன் மற்றும் காவலர் ராமர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

police

அதிகார மிடுக்கில் இருக்கும் சிலர், சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பு கூட இல்லாமல் அவர்களை காயப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே சமயம் சகா ஊழியரால் காயம்பட்ட ஒருவருக்கு  வீடு தேடி வந்து வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு பக்குவம் அடைந்த நல்ல உள்ளங்களும் காவல்துறையில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.