விஜய் டிவியின் அயோக்கியத்தனம்..!

 

விஜய் டிவியின் அயோக்கியத்தனம்..!

ஏதோ பெண்குலத்திற்கு இவர்கள் தான் மரியாதைக்கான அத்தாரிட்டி என்பது போல நேற்று சித்தப்பு சரவணன் மீது குற்றம்சாட்டி  பிக்பாஸில் இருந்து வெளியே துரத்தி விட்டார்கள்.
அப்படி என்ன தப்பாக சரவணன் சொல்லிவிட்டார் ?. கல்லூரியில் படித்த காலத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது பெண்களை இடித்ததாக வெளிப்படையாக சொன்னார். அதை தவறுதான் என்று ஒத்துக் கொண்டு இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனதையும்  சொன்னார்.

விஜய் டிவியின் அயோக்கியத்தனம்..!

ஏதோ பெண்குலத்திற்கு இவர்கள் தான் மரியாதைக்கான அத்தாரிட்டி என்பது போல நேற்று சித்தப்பு சரவணன் மீது குற்றம்சாட்டி  பிக்பாஸில் இருந்து வெளியே துரத்தி விட்டார்கள்.

saravanan

அப்படி என்ன தப்பாக சரவணன் சொல்லிவிட்டார் ?. கல்லூரியில் படித்த காலத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது பெண்களை இடித்ததாக வெளிப்படையாக சொன்னார். அதை தவறுதான் என்று ஒத்துக் கொண்டு இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனதையும்  சொன்னார். இதற்காக அவரை கண்டனம் செய்த பிக்பாஸ் நிர்வாகம் அத்தோடு அந்த விஷயத்தை விட்டு இருக்க வேண்டும். 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில பெண்கள் எவ்வளவு ஆபாசமாக உடை அணிகிறார்கள் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது பெண்களின் இழிவாக ஏன் பார்க்கப்படவில்லை ?. தற்போதைய நிகழ்ச்சியில் சாக்ஷி அரைகுறை ஆடையுடன் வலம் வருவது மார்க்கெட்டிங் உத்தியா? கிட்டத்தட்ட உள்ளாடைகளுக்கு சமமான ஆடைகளுடன் சாக்ஷி நடமாடுவது

ஆண்களை பாதிக்காதா? 
மோகன் வைத்யா போன்ற கிழட்டு பூனைகள் இன்றும் பேருந்துகளில் திருட்டுப் பாலை ருசிக்க அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
(நல்லவேளை நான் பஸ்ஸில் பயணிப்பதே இல்லை) 
இதே மோகன் வைத்யா நிகழ்ச்சியில் பெண்களை கண்டபடி கட்டிப்பிடித்து திரிந்தது தவறாக ஏன் பார்க்கப்படவில்லை? 
கவின் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களின் மனங்களை சலனப்படுத்தியது ஏன் கண்டனம் செய்யப்படவில்லை? 
சேரன் மீது மீரா மிதுன் அபாண்டமாக குற்றம் சொன்னது ஏன் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வில்லை? 
தவிரவும் இந்த நிகழ்ச்சியில் காதல் உணர்வு கொச்சைப்படுத்துவது இருபாலரையும் அவமானப்படுத்தவில்லையா?? 
இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாத பிக்பாஸ் நிர்வாகம் சரவணனை மட்டும் அநியாயமாக வெளியேற்றியது நியாயமற்ற செயல். 
வெளியே போகச் சொன்ன போது அதிர்ச்சியில் சரவணனின் முகம் உறைந்ததை நம்மால் ரசிக்க முடியவில்லை….

-தமிழ் சுரேஷ்….