விஜய் ஆண்டனியின் கொலைகாரன் ரிலீஸ் தேதி மாற்றம்! 

 

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் ரிலீஸ் தேதி மாற்றம்! 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் கதாநாயகனாக அவதாரம் எடுத்து பல  வெற்றிப்படங்களைக் கொடுத்து வருபவர் விஜய் ஆண்டனி. அந்த வரிசையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, அவருடன் vtv கணேஷ், நாசர்,சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

பின்னர் இந்த மாதம்  5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.  தற்போது அந்த தேதியும் மாற்றி வரும் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது படம் வெளிவருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்