விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

 

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, “யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன் என்றார். ரஜினிக்கு அடுத்தப்படியாக தற்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியிருக்கிறார்.

ஜெயக்குமார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் நிலையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு கூவத்தூர் நிகழ்வை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பது அவர்களின்  இயலாமையை காட்டுகிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என தெரிவித்த கருத்து சீமானின் தனிப்பட்ட கருத்து. விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது” என்று தெரிவித்தார்.