விஜய்யை ‘ஹெட் மாஸ்டர்’ ஆக்கிவிடாதீர்கள்! விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்… 

 

விஜய்யை ‘ஹெட் மாஸ்டர்’ ஆக்கிவிடாதீர்கள்! விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்… 

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த வாரம்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த வாரம்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய்  ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை முடிந்து சில தினங்களிலேயே மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரை காண பெருமளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததால்  விஜய் அங்கிருந்த வேனின் மீது ஏறி செல்பி எடுத்து அதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

master

இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், “அரசியல்வாதிகளுக்கு அன்பான வேண்டுகோள்… தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களான எங்களுக்கு 
மாஸ்டர் ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தயவு செய்து அவரை ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்- இப்படிக்கு மெய் வேலியாய் நிற்கும் ரசிகர்கள்  ” என குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.