விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அடித்த அந்தர் பல்டி!  நல்ல குடும்பம்டா சாமி! செம கலாய் வீடியோ!

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அடித்த அந்தர் பல்டி!  நல்ல குடும்பம்டா சாமி! செம கலாய் வீடியோ!

விஜய் இன்னொரு ரஜினியாகவே உருவாகி வருகிறார்… ஆனால் எந்த விதத்தில் ரஜினியைக் காப்பி அடிக்கிறார் என்பதைத் தான் எல்லோரும் உற்று நோக்கி வருகிறார்கள். தன்னுடைய ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும், அரசியல் பற்றி பேச்சைத் துவங்கி பரபரப்பைக் கிளப்புவார் ரஜினி. உடனே அவரது ரசிகர்களும், மொத்த மீடியாவும் ரஜினி பேசியதை ஒரு வாரத்திற்கு வெச்சு செய்வார்கள். விஜய் ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக கதைச் சொன்னதையும், பேசியதையும் இந்த ரகமாகத் தான் பார்க்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

vijay and rajini

இந்நிலையில் விஜய் நடித்திருக்கும் பிகில்  உட்பட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் எல்லாம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். விஜய் படம் ரிலீஸ் நேரத்தில் வேண்டுமென்றே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றே விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம், இரண்டாயிறம் என்று விற்று லாபம் பார்த்து வருவதால் இந்த தடை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில்  ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. அந்த வீடியோவைத் தான் அஜித் ரசிகர்கள் வெச்சு செய்து வருகிறார்கள். 

sac

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அதில் என்ன இருக்கு? இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை  மேடையிலேயே புகழ்ந்து தள்ளி இருக்கிறார். விஜய், படங்களிலும், விழாக்களிலும் ரொம்ப தைரியமா ஆளுங்கட்சியை எதிர்பாரு… அவருடைய அப்பா கூழை கும்பிடு போட்டு காக்கா பிடிப்பாரு… நல்ல குடும்பம்டா சாமி என்று அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகிறார்கள்.