விஜய்சேதுபதி ஸ்டைலில் வெளியானது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில்! 

 

விஜய்சேதுபதி ஸ்டைலில் வெளியானது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில்! 

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:  சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனா பட வெற்றியை அடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரியோராஜை ஹீரோவாக வைத்து தனது இரண்டாவது படத்தை துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப்  புகழ் கார்த்திக் இயக்கியுள்ளார். ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன்  RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

siva

கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

rio

இந்நிலையில் எப்போதும் எதையும் வித்தியாசமாகச் செய்யும் பிளாக் ஷீப் இப்படத்தின் டைட்டில்லை  வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளம்பரம் செய்யும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டீசரை படக்குழு பயன்படுத்தியுள்ளது.

மேலும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.