விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன்: ரஜினிகாந்த் புகழாரம்

 

விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன்: ரஜினிகாந்த் புகழாரம்

விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

சென்னை: விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ’பேட்ட’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திரைப்பட பாடல்களை பொதுமக்கள் வெளியிட்டனர். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், கஜா புயலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும், ரஜினி மக்கள் மன்றமும் உதவுகிறது. கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு மிகப்பெரியது. அனைவரும் ஒன்றாக கை கோர்த்து அவர்களுக்கு உதவ வேண்டும். பேட்ட திரைப்படத்தை தமிழகத்தில் ஷூட்டிங் செய்ய முடியாது. ஏனெனில் அன்பு தொல்லை. எனவேதான் வட இந்தியாவில் ஷூட்டிங் நடத்தினோம்.

vijay

படத்தில் ஜித்து என்ற கேரக்டர் வரும். அது யார் பண்ணுவாங்க என நினைத்தேன். விஜய் சேதுபதி பண்ணா எப்டி இருக்கும்னு கார்த்திக் என்னிடம் கேட்டார். விஜய் சேதுபதி நடிப்பாராஎன கேட்டேன் . நீங்கள் சரி என்று சொல்லுங்கள் என்றார்.

அடுத்த நாளே விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கார்த்திக் சொன்னார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் சேதுபதியை பார்த்திருக்கேன், நல்ல நடிகன் என்று இருந்தேன். ஆனால் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் சாதாரண நடிகன் இல்லை மகா நடிகன். புதிது புதிதாக பண்றார். அதேபோல்  அவர் அருமையான மனிதன். விஜய் சேதுபதியின் பேச்சும், சிந்தனையும் வேறு மாதிரி இருக்கிறது. நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது.

sasi

 

இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த நல்ல மனிதர்களில் சசிக்குமாரும் ஒருவர். நவாசுதின் சித்திக் வித்தியாசமாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் என்னை, 80ஸ், 90ஸ்க்கு கார்த்திக் சுப்புராஜ் கொண்டு சென்றுவிட்டார். இந்த யூனிட்டே எனது ரசிகர்களா இருக்காங்க.

 

karthick

 

கார்த்திக் சுப்புராஜின் கதை சொல்லும் தன்மை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. எக்ஸ்ட்ரா சாப்டக்கூடாது, தூங்கக்கூடாது, பேசக்கூடாது, அடவைஸ் பண்ணக்கூடாது இந்த எக்ஸ்ட்ராவ கரெக்ட்டா யூஸ் பண்ணா வாழ்க்கை நல்லா இருக்கும். அனிருத்தை சிறிய வயதிலேயே இசைக்காக அவரது பெற்றோர் தயார் செய்தார்கள். அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.