விஜய்சேதுபதியோடு கூட்டணி அமைக்கும் ஸ்ருதி ஹாசன் 

 

விஜய்சேதுபதியோடு கூட்டணி அமைக்கும் ஸ்ருதி ஹாசன் 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியோடு நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியோடு நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்து புதிய படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெற்றிப்படங்களைக் குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்து வரும் ‘மாமனிதன், ”சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சயிர நரசிம்மரெட்டி’, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கபடுகிறது.