விஜயகாந்த் ஃபார்முலாவில் ரஜினியை அழிக்கணும்… விஜயை வைத்து மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் ப்ளான்..!

 

விஜயகாந்த் ஃபார்முலாவில் ரஜினியை அழிக்கணும்… விஜயை வைத்து மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் ப்ளான்..!

ரஜினியை சமாளிக்க விஜயை வைத்து மாஸ்டர் ப்ளானில் இறங்கி இருக்கிறது திமுக. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு நட்சத்திர ஹோட்டலில் விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தையை மு.க.ஸ்டாலின் நடத்தியதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் இப்போதைக்கு அதிமுகவை கண்டு பயப்படவில்லை. கமலை நினைத்து கலங்கவில்லை. விஜயகாந்தை பற்றி விரக்தியாகவில்லை. பாஜக குறித்து பதறவில்லை. அவருக்கு இருக்கும் ஒரே கவலை ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவது தான். 

vijayakanth

காரணம் 23 ஆண்டு ஃப்ளாஸ்பேக்கை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாய் மறக்கவில்லை. 1996 ல் ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ்தான் திமுக ஆட்சிக்கு வரக்காரணமே. தமாகா -உருவாகி திமுக கூட்டணி அப்போது ஆட்சியை பிடிக்க ரஜினி கொடுத்த வாய்ஸ் மிக முக்கியக்காரணம். ஆகையால், ரஜினிக்கு இருக்கும் காந்த சக்தி எப்படி பட்டது என மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிந்து  வைத்திருக்கிறார். 

இப்போதும் அந்தத் தாக்கம் ரஜினிக்கு இருப்பதாகவே நம்புகிறார்ம் மு.க.ஸ்டாலின். ஆகையால் அவர் கட்சி தொடங்கினால் திமுகவுக்கு சிக்கல் என நினைக்கிறார். ஆகவே தான் திமுகவின் இப்போதைய அஜெண்டா ரஜினியை டார்க்கெட் செய்து விஜயகாந்த் ஃபார்முலாவில் அழித்தே ஆக வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார் மு.க.ஸ்டாலின். 

udhay vijay

அரசியல் கட்சி ஆரம்பித்த போது கம்பீரமாக களமிறங்கி அதிமுக – திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது தேமுதிக. அடுத்தடுத்த தேர்தல்களில் தேய்ந்து தேய்ந்து இப்போது தள்ளாடி வருகிறது தேமுதிக. விஜயகாந்தின் செயல்பாடுகள், பேச்சுக்கள் அத்தனையையும் வைத்து அவரது கேரக்டரையே டேமேஜ் செய்ததில் திமுகவுக்கும் பங்குண்டு. மீம்ஸ் கிரியேட் செய்தது வரை பங்குண்டு. 

stalin

ரஜினிக்கு எதிராக அந்த வேலைகளை இப்போது கையில் எடுத்திருக்கிறது திமுக ஐடி விங். அடுத்து ரஜினியை சமாளிக்க விஜயை வைத்து மாஸ்டர் ப்ளானில் இறங்கி இருக்கிறது திமுக. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு நட்சத்திர ஹோட்டலில் விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தையை மு.க.ஸ்டாலின் நடத்தியதாக கூறப்படுகிறது.  ரஜினி ஆன்மிக அரசியல் நடத்துவார். அப்போது அவருக்கு எதிராக விழும் வாக்குகளை மொத்தமாக அள்ள உங்களது சப்போர்ட் அவசியம். சேர்ந்து பயணிக்கலாம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.