விசிக போராட்டம் எதிரொலி: காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! 

 

விசிக போராட்டம் எதிரொலி: காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! 

நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வந்ததால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், நான்  மோடிக்கு எதிராக பேசுவதைத் திரித்து நான் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று  அவதூறு பரப்புகிறார்கள். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. என்னைப் பின்பற்றும் மக்களில் சுமார் 80% சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறியிருந்தார்.

vck

இதுகுறித்து பாஜக ஆதரவாளரும் நடிகையுமான  காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், லைட்டா க்ளிசரின்  போடலாமே சார்..நடிப்பு பத்தல என்றும் தனது மற்றொரு பதிவில், எல்லா இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்று குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளார்.  மதவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசியிருக்கும் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுமட்டுமின்றி, திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. எல்லா இந்துக்களும் அவருக்கு சேலை அல்ல ஒரு மடிசாரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எம்.பினா 5 அடி கூந்தல் இருக்குமோ..? என்று  வசைபாடினார். 

காயத்ரி ரகுராம் ட்விட்டர்

இதனால் நேற்று காலை விசிக மகளிர் அமைப்பினர் 50ற்கும் மேற்பட்டோர், சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனை ட்விட்டரில் தொடர்ந்து  விமர்சித்து வந்தததால் 3 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டிருந்த நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.