விசாக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் 

 

விசாக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் 

தமிழகத்தில் அமைந்துள்ள விசாக நட்சத்திரகாரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

27 நட்சத்திரங்களில் 16 வது நட்சத்திரமாக வரும் நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் ஆகும். இதன் விருட்சம் விளாமரம் இதன் நட்சத்திராதிபதி குரு பகவான் இதன் வடிவம் மூறம் மற்றும் தோரண வாயில் இதன் அதிதேவதை இந்திராக்னி ஆவார்.

muru

இந்திரனும் அக்னியும் இணைந்த சக்தியாக இவர் கருதப்படுகிறார் ஆறுமுகக்கடவுள் அக்னி வடிவாக தோன்றியவர் அதோடு அவர் கையில் இந்திரனின் வஜ்ரம் பொருந்திய வஜ்ரவேல் இருப்பதைக் காணலாம். 

எனவே கார்த்திகை நட்சத்திர நாளில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து 6 தீக்கனல்களாக வெளிப்பட்டு விசாக நட்சத்திரத்தில் அன்னை பார்வதியின் மூலம் ஆறுமுகமும் ஓர் முகமாக உருவானதால் விசாகத்தின் அதிதேவதையாக முருகப்பெருமானும் இந்திராக்னி அம்சமாக அருள்பாலிக்கிறார். 

எனவே விசாகத்தில் பிறந்தவர்கள் குமரக்கடவுளை வழிபடுதல் விசாகம் நட்சத்திரத்தின் பெரும்பகுதி இடம் பெறும் துலாம் ராசிக்கு பூர்வ புண்ணியம் என்ற ஐந்தாமிடமாக வருவது கும்ப ராசி என்பதால் விசாகத்தில் பிறந்தவர்கள்

murugs

தங்கள் வழிபாடு மற்றும் பரிகாரங்களை அம்பாள் அல்லது சிவன் கோயில்களில் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்தில் வைதீஸ்வரன் கோயில் அருகில் இருக்கும் திருநின்றியூர் திருத்தலத்தில் விளாமரம் தலவிருட்சமாக உள்ளது எனவே விசாகத்தில் பிறந்தவர்கள் இங்கு சென்றுவழிபடுதல் நன்மை பயக்கும்.

விசாகத்தில் பிறந்தவர்களுக்கு பரம மைத்ரம் என்ற அதி நட்பு தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் ஸ்வாதி, சதயம், திருவாதிரை ஆகும். இவை இடம் பெறும் ராசிகள் துலாம் ராசிக்கு 1-5-9 என்ற திரிகோண ராசிகளாக வரும் என்பதால் விசாகத்தில் பிறந்தவர்கள்

ஸ்வாதி நட்சத்திர நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாருக்குத் தேனபிஷேகமும் குங்குமார்ச்சனையும் செய்து சிவப்பு ஆடை அணிவித்து மல்லிகைப்பூ மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர சுய சிந்தனை, சுய பலம், உடல் மன நலம் மேம்படும் வாழ்க்கைப் பயணங்களில் தடையின்றி முன்னோக்கி நகரலாம். வாழ்வில் சுய முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

murugthy

108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குவது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில் ஆகும். இந்த ஆலயம் தஞ்சை மாவட்டம் திருவையாறு ல் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு, திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் கபிஸ்தலம் என பெயர் ஏற்பட்டது.

விசாக நட்சத்திரகாரர்கள் கபிஸ்தலம் பெருமாள் கோயிலுக்கு உங்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்தில் சென்று வழிபாடு செய்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்று நம் முன்னோர்கள் பல்வேறு கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர்.