விசாகப்பட்டினத்தில் அறிமுகம் ஆனது ரோபோ போலீஸ்! 

 

விசாகப்பட்டினத்தில் அறிமுகம் ஆனது ரோபோ போலீஸ்! 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்  முதன்முறையாக ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலரும் போலீஸ் நிலையம் வந்து ரோபோ போலீசுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
விசாகபட்டினத்தில் உள்ள மகாராணிபேட் போலீஸ் நிலையத்தில் மிஸ் சிபிரா என்ற ரோபோ போலீஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நேரடியாக இந்த ரோபோவிடமே புகார் செய்யலாம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்  முதன்முறையாக ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலரும் போலீஸ் நிலையம் வந்து ரோபோ போலீசுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
விசாகபட்டினத்தில் உள்ள மகாராணிபேட் போலீஸ் நிலையத்தில் மிஸ் சிபிரா என்ற ரோபோ போலீஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நேரடியாக இந்த ரோபோவிடமே புகார் செய்யலாம். நேரடியாக பேசுவதன் மூலம் ரோபோ புகாரை பெற்றுக்கொள்ளும். எழுத்து மூலமாக அளிக்க விரும்புகிறவர்களுக்கு உதவியாக ரோபோவுடலின் மீது மினி டேப்லெட் வைக்கப்பட்டுள்ளது. அதில் டைப் செய்து புகார் அளிக்கலாம். 

robo police

புகாரைப் பெற்ற ரோபோ சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லும். 24 மணி நேரத்தில் புகார் தொடர்பான விவரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ரோபோ புகார்தாரருக்கு பதில் தரும். பிரச்னை தீர்க்க முடியாவிட்டால், 24 மணி நேரத்துக்குப் பிறகு உயர் அதிகாரிக்கு புகார் அனுப்பப்படும். அவராலும் அதை சரி செய்ய முடியாவிட்டால் புகார் மனு தொடர்பான நிலவரம் குறித்த அறிக்கை முதல்வருக்கு அனுப்பப்படும். இதனால், காவலர்கள் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த ரோபோவால் அதிகபட்சம் 138 புகார் மனுக்கள் மீது மட்டுமே பெற முடியும். அதற்குள்ளாக முந்தைய புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே அடுத்த புகாரை பெற முடியும். இந்த ரோபோவில் 13 கேமராக்கள் உள்ளன. இதனால், 360 டிகிரி கோணத்தில் படம் எடுக்க முடியும். பழைய குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் இந்த ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள் யாராவது இந்த ரோபோ அருகில் வந்தால் உடனடியாக அது பற்றிய விவரம் காவல் நிலைய அதிகாரிக்கு அனுப்பபட்டுவிடும். 
இந்த ரோபோவை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். கல்லூரி மாணவிகள் இந்த ரோபோவுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.