விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரோ!

 

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரோ!

விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

பெங்களூரு:  விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்லும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. 

moon

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

lander

இந்நிலையில் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ. சுற்று வட்டப் பாதையிலிருந்து 50 கி.மீ. தூரமாகக் குறைக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் விக்ரம் லேண்டரை துல்லியமாகப் படம்பிடிக்க இயலும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.