விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்த தல தோனி !!

 

விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்த தல தோனி !!

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். 

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். 

dhoni

கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐ.பி.எல் 12வது சீசன், நேற்று முன்தினத்தோடு நிறைவடைந்தது. 
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 149 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 
இதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் கொடுத்ததன் மூலம் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. 

dhoni

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
இறுதி போட்டியில் மும்பை அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் டி.காக்கை தனது சாதூர்யமான விக்கெட் கீப்பிங் மூலம் வீழ்த்திய தோனி, இதன் மூலம் ஐ.பி.எல் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். 

dhoni

ஐ.பி.எல் போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியல்; 
தோனி – 132 விக்கெட்டுகள் (94 கேட்ச், 38 ஸ்டெம்பிங்)
தினேஷ் கார்த்திக் – 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 31 ஸ்டெம்பிங்).