வாழைப்பூ  புளிக்கூட்டு

வாழைப்பூ  புளிக்கூட்டு

நமது உடலுக்கு அறுசுவைகளில், அனைத்து சுவைகளுமே தேவைப்படும். துவர்ப்பு சுவையின் காரணமாகவும், சுத்தம் செய்வதற்கு சோம்பல் பட்டுக்கொண்டும் அதிகளவில் வாழைப்பூவை நாம் சமைப்பதில்லை. நமது சோம்பேறித்தனத்தின் காரணமாக பழக்கம் இல்லாமல், குழந்தைகளும் வாழைப்பூவையும், வாழைத்தண்டையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இவற்றில் அபரிமிதமான சத்துக்கள் இருக்கின்றன.

தேவையான பொருட்கள்
வாழைப்பூ            -1
புளி                       -சிறிதளவு
கடலைப்பருப்பு        -2டீஸ்பூன்
தேங்காய்                  -1/4மூடி
மோர்                -1டம்ளர்
காய்ந்த மிளகாய்                -3
உப்பு , எண்ணெய்    
உளுத்தம் பருப்பு  – 1 டீஸ்பூன்

banana

செய்முறை
பெரிய வாழைப் பூவாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து, மோரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வாழைப் பூவை சுத்தம் செய்யும் போது, மறக்காமல் பூவின் உள்ளே இருக்கும் நரம்புகளையும் நீக்கி விட வேண்டும். தனியாக புளியை திக்காக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு இவற்றை சேர்க்க வேண்டும். மோரில் ஊறிய வாழைப்பூவை இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கும் போது சிறிது தண்ணீர் தெளித்து விடுங்கள். தேங்காய் துருவல் இப்போது சேர்த்து கலந்து விட்டு புளிக்கரைசலை அதன் மீது லேசாக ஊற்றி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து பதம் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறலாம். வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கும் சக்தி வாழைப்பூவிற்கு உண்டு.
[3:41 PM, 10/9/2019] Gowtham: சளித்தொல்லை