வார்டு வார்டாக காய்கறிகள் விற்பனை செய்ய வாகனங்கள் ஏற்பாடு!

 

வார்டு வார்டாக காய்கறிகள் விற்பனை செய்ய வாகனங்கள் ஏற்பாடு!

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறி இருந்தாலும் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும் என்று கூறினார். 

ttn

தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் மொத்தமாக  32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. மக்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி இருந்தால், உடனே சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பள்ளி மைதானங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் சந்தைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அவசர தேவைகளுக்கு 1077 என்ற எண்ணையும் 9750554321 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

ttn

மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில்  சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  நாளை முதல் அனைத்து காய்கறிகளையும் வார்டு வார்டாக கொண்டு வந்து விற்பனை செய்ய 50 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.