வாரத்தின் முதல் நாளில் ஏற்றுத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

 

வாரத்தின் முதல் நாளில் ஏற்றுத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10,750 புள்ளிகளை தாண்டியது.

மும்பை: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10,750 புள்ளிகளை தாண்டியது.

வலுவான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணையின் விலை இறக்கம்  காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. கச்சா எண்ணையின் விலை இன்றைய வர்த்தக நேர முடிவில் ஒரு பேரலுக்கு 67 அமெரிக்க டாலரைத் தொட்டது.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 317.72 (+0.90%) புள்ளிகள் உயர்ந்து 35774.88 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 81.20 (0.76%) புள்ளிகள் உயர்ந்து 10763.40 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 1330  பங்குகள் உயர்வையும் 1278 பங்குகள் சரிவையும் கண்டன. 160 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச்சந்தையில் ஐ.டி.சி (+2.87%), டாடா மோட்டார்ஸ் (+2.61%), சன் ஃபார்மா (+2.27%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களையும், ஒ.என்.ஜி.சி (-1.15%), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (-1.4%) நிறுவனங்களின்  பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.

தேசிய பங்குச்சந்தையில் யெஸ் வங்கி (+7.23%), ஐ.டி.சி (+2.87%), டாடா மோட்டார்ஸ் (+2.61%), சன் ஃபார்மா (+2.27%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களையும், ஜி.எ.ஐ.எல் GAIL (-2.19%), இண்டியா ஹோட்டல்ஸ் (-4.23%), ஒ.என்.ஜி.சி (-1.15%), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (-1.4%) நிறுவனங்களின்  பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.