வாய் போன்ற வடிவத்தில் மணிபர்ஸ்!

 

வாய் போன்ற வடிவத்தில் மணிபர்ஸ்!

மனிதனுடைய வாய் போன்று விசித்திரமான மணி பர்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

மனிதனுடைய வாய் போன்று விசித்திரமான மணி பர்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஜப்பானினை சேர்ந்த இசையமைப்பாளர் அமெச்சூர் என்ற இசை கலைஞரால் இந்த மணி பர்ஸ்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸை உருவாக்க 2 மாதங்கள் எடுத்துக்கொண்டதாக அமெச்சூர் தெரிவித்துள்ளார். பார்ப்பதற்கு மனிதனின் வாய்ப்போன்று இருக்கும் இந்த பர்ஸ், இளஞ்சிவப்பு உதடுகள், பற்கள், ஈறுகள் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த பர்ஸ் விற்பனைக்கு அல்ல என்று தெரிவித்துள்ள அதன் வடிவமைப்பாளர், எவ்வகை பொருளினால் உருவாக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

 

人肉小銭入れ作りました pic.twitter.com/k6SIDETWD5

— doooo (@44doooo) June 1, 2019

இணையத்தில் வைரலாகிவரும் இந்த வீடியோவை 14 மில்லியன் பேர் விமர்சித்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் இந்த பர்ஸ் பெற்றுள்ளது.