வாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள்

 

வாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள்

 ‘ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லையே ஒழிய பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும்.

 ‘ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லையே ஒழிய பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான்.
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகளை நாட நீங்கள் எண்ணுவீர்களானால், ஆயுர்வேதத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் நீங்கள் வாய் துர்நாற்றத்தை சரி செய்யலாம். முதலில் நாம் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான சில காரணங்களை அறிவோம்.

வாய் துர்நாற்றத்துக்கான காரணங்கள்:

-வாயை சுத்தமாக வைத்து கொள்ளாமை மற்றும் செரிமானக் கோளாறு
-வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்களை உட்கொள்ளுதல்
-தொடர்ச்சியாக வாய் உலர்ந்து போதல்
-வாயில் ஏற்படும் கிருமி தொற்று
-ஈறுகளில் தோன்றும் நோய்
-மூக்கு, சைனஸ் அல்லது தொண்டையில் ஏற்படும் நோய் தொற்று
-சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுதல்
-புகையிலை பொருட்களை பயன்படுத்துதல்
-பிற வளர்சிதை மாற்றங்கள், அரிதாக சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள்

ஆயுர்வேதத் தீர்வுகள்:

ஆயுர்வேதத்தை பொருத்த வரையில், மோசமான வாய் ஆரோக்கியம் மற்றும் மோசமான செரிமான சக்தி ஆகிய இரண்டும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஏனென்றால் மோசமான ஜீரண சக்தியினால் பேக்டீரியாக்கள் உடலிலும் வாயிலும் பெருகிவிடும். 
இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும். சில மூலிகைகளையும் சில எளிமையான வீட்டு குறிப்புகளையும் பின்பற்றி அதன் மூலம் பிரச்சினையை மேலோட்டமாக மூடி மறைக்காமல் வேரிலிந்து சரி செய்து கொள்ள ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

புதினா இலைகள்:

pudhina
 
வாய் துர்நாற்றம் நீங்க அருமையான மூலிகை புதினா. புத்துணர்ச்சியான சில புதினா இலைகளை மென்று தின்று பாருங்கள். புதினா உங்களது வாயில் உள்ள பேக்டீரியாவை அழிக்கிறது. அதன் இலைகளில் உள்ள பச்சையம் இயற்கையான மவுத் ஃப்ரெஷனராக வேலை செய்யும். இலைகளை மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் அளிக்கும் பேக்டீரியா நீங்கி விடும். மற்றும் புதினாவின் நறுமணம் வாய்க்கு புத்துணர்ச்சியளிக்கும்.

கிராம்பு

krambh

கிராம்பில் பேக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளதால் அது வாயில் உள்ள பேக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. அது உங்களது மூச்சுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. வாயில் சிறிது கிரம்பினை போட்டு நன்றாக மெல்ல வேண்டும். அதன் வலுவான சுவை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கிராம்பு டீ அல்லது கிராம்பின் நற்குணம் கொண்ட டூத் பேஸ்டுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

டீ ட்ரீ ஆயில்

fdhdjj

 

டீ ட்ரீ ஆயில் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. டீ ட்ரீ ஆயிலின் நற்குணமானது கிருமிகளை கொல்வதில் சிறப்புடன் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. இந்த எண்ணெயை சில சொட்டுக்கள் நீரில் ஊற்றி வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் வாயை சுத்தமாகவும் வைக்கும்.

சோம்பு:

vbcg
 
ஆன்டி பேக்டீரியல் குணங்கள் கொண்ட சோம்பு வாய் துர்நாற்றத்தை எதிர்க்க பயன்படும். அதனை வெறுமனே மென்றும் தின்னலாம் அல்லது உங்களது டீயிலும் கலந்து பருகலாம். அப்படி மென்று தின்னும் போது வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பேக்டீரியாக்களும் அழிந்து விடும்.

திரிபலா:

dgg

திரிபலா ஆயுர்வேதம் மூலம் நமக்கு கிடைத்துள்ள அரிய முத்தாகும். அது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாது செரிமான உறுப்புகளை சரி செய்து கழிவுகளை நீக்குகிறது,” என்கிறார் லீவர் ஆயுஷின் ஆயுர்வேத நிபுணர் டாக்டர். மஹேஷ் டி.எஸ்.

டாக்டர். மஹேஷ் டி.எஸ் போன்ற ஆயுர்வேத நிபுணர்கள் திரிபலாவையே பரிந்துரைக்கின்றனர். செரிமானத்துக்கு உதவும் திரிபலா மூலிகை ஜீரண சக்தியை அதிகரித்து கெட்ட கழிவுகளை போதிய இடைவெளியில் முற்றிலும் வெளியேற்றுகிறது. முறையான செரிமானமும் வாய் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். த்ரிபலா, ஆயுர்வேத கடைகளில் கேம்ஸ்யூல் மற்றும் டானிக் வடிவில் கிடைக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

நாக்கை சுத்தம் செய்தல் ஆயுர்வேதத்தை பொருத்த வரையில் வாய் ஆரோக்கியத்துக்காக நாம் செய்ய வேண்டிய நடை முறையாகும். இதனால் நாக்கில் படிந்துள்ள மெல்லிய தகடுகள் நீங்கிவிடும். இதனால் நாக்கில் உள்ள கிருமி தொற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது போல நாம் பற்களை ஒரு நாளுக்கு மூன்று முறை (புதினாவின் நற்குணம் கொண்ட டூத் பேஸ்டாக இருந்தால் இன்னும் சிறப்பு) சுத்தம் செய்ய வேண்டும். அதாவது காலை எழுந்தவுடன், இரவு உறங்க செல்லும் முன் மற்றும் மதிய உணவு உண்ட பிறகு.
பல் சொத்தைகள் மற்றும் கிருமி தொற்று நீங்க ஃப்ளாசிங் செய்வது அவசியமாகும். அப்படி செய்ய தவறுவதே வாய் துர்நாற்றத்துக்கு முக்கிய காரணமாகிறது.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், ஃப்ரெஷான காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. மலச்சிக்கலையும் வாய் துர்நாற்றத்துக்கான முக்கிய காரணியாக ஆயுர்வேதம் கருதுகிறது.வாயினால் சுவாசித்தல், மது அருந்துதல் மற்றும் புகையிலை உட்கொள்ளுதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.