வாய்ஸ் நாய்ஸ் கேன்சல் வசதி கொண்ட சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

வாய்ஸ் நாய்ஸ் கேன்சல் வசதி கொண்ட சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

சோனி டபிள்யூ.ஹெச்-ஹெச்910என் என்ற புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி: சோனி டபிள்யூ.ஹெச்-ஹெச்910என் என்ற புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சோனி டபிள்யூ.ஹெச்-ஹெச்910என் என்ற புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏ.என்.சி. (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் 5, ஹை-ரெஸ் ஆடியோ, LDAC, DSEE-HX, டச் கண்ட்ரோல்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஹெட்போனை வாங்க முடியும்.

sony

சோனியின் சென்ஸ் என்ஜின் தொழில்நுட்பம் இந்த ஹெட்போனில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. மேலும் இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் நீடிக்கும். இத்துடன் யு.எஸ்.பி டைப்-சி மூலம் வெறும் பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஹெட்போனை பயன்படுத்த முடியும்.