வாயுத் தொல்லையை சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

 

வாயுத் தொல்லையை சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

வாயு தொல்லை என்பது உலகம் முழுக்க அநேகம் பேருக்கு ஏற்படுவது தான். நெஞ்சில் எரிச்சல், வலி ,வயிற்று பொருமல் ஆகியவையே வாயு தொல்லையின் ஆரம்ப அறிகுறிகள். ஆனால் தொடர்ந்து இவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். வாயு தொல்லை தான் என்று கண்டறிந்தால், கவலையில்லாமல் உணவு பழக்கங்களிலேயே சரி செய்யலாம்.

வாயு தொல்லை என்பது உலகம் முழுக்க அநேகம் பேருக்கு ஏற்படுவது தான். நெஞ்சில் எரிச்சல், வலி ,வயிற்று பொருமல் ஆகியவையே வாயு தொல்லையின் ஆரம்ப அறிகுறிகள். ஆனால் தொடர்ந்து இவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். வாயு தொல்லை தான் என்று கண்டறிந்தால், கவலையில்லாமல் உணவு பழக்கங்களிலேயே சரி செய்யலாம்.  

gas

சாதாரணமாக இரண்டு வேளை சிற்றுண்டியும், ஒருவேளை சோறுமே ஆரோக்கியமான மனிதர்களுக்கு போதுமானது. அதிலும் ஏதாவது ஒரு வேளை சமைக்காத பச்சை காய்கறிகளும் , பழங்களும் இருந்தால் மிகவும் நல்லது. இரவு முழுவதும் தூக்கத்தில் இருப்பதால்  காலையில் நம் உடலில் உருவாகும் பித்தத்தை குறைக்க குளிர்ச்சியான உணவுகளை  அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, சிறுதானிய உணவுகள் ,இட்லி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது..
வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்
தினசரி குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடத் தவறுதல், காலை உணவை தவிர்த்தல், பசிக்கும் போது காபி, டீ, குளிர்பானம் குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடத்தல் முதலிய காரணங்களே வாயுத்தொல்லை உருவாக முக்கிய காரணங்கள். அது மட்டுமல்ல சரியாக ஜீரணம் ஆகாமல் போவதும் ஒரு காரணமாக அமைகிறது.
சரியாக செரிக்கப்படாத உணவுப் பொருட்கள் நம் உடலுக்குள் வாயுவாக மாறுகிறது.

gas

பேசிக்கொண்டே சாப்பிடும் போதும், அவசர அவசரமாக சாப்பிடும் போதும் காற்று நம் உடலுக்குள் சென்று விடுவதாலும், புகையிலை, குளிர்பானங்கள், சூயிங்கம் மெல்லும் போதும் வாயு நம் உடம்பில் சேருகிறது. கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப்பட விட்டாலும் வாயுத்தொல்லை உருவாகலாம்.
அல்சர் மற்றும் குடல் புண்கள் பித்தப்பை மற்றும் கணையத்தில் உருவாகும் தொற்றுநோயினாலும் வாயுத்தொல்லை ஏற்படலாம்.
எப்படி தவிர்க்கலாம்?
ஆள்காட்டி விரலை கட்டைவிரலின் அடிப்பகுதியில் வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவேண்டும். மற்ற விரல்களை நேராக வைக்க வேண்டும். இந்த முத்திரை செய்தாலும் வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். 
உணவை  சிறிது சிறிதாக நிதானமாக மென்று சாப்பிட வேண்டும். அவசரம் கூடாது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். 
மொச்சை, உருளைகிழங்கு , வாழைக்காய் மற்றும் முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவு வகைகளை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் சிறிய அளவில் சமைக்கும் போது பெருங்காயம் , இஞ்சியுடன்  சமைத்தால் வாயுவை குறைக்கலாம்.
காரம் மசாலா எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல் நலம்.

gas

புதிதாக சமைக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ணவேண்டும். 
தினமும் சாப்பிடவுடன் சிறிது தூரம் நடப்பதும் வாயு சேர்வதை தடுக்கும்.
வெள்ளைப்பூண்டை பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை நீங்கிவிடும்
சுக்கு, மிளகு, வெற்றிலை மூன்றையும் அரைத்து சாப்பிட்டாலும் வாயு நீங்கி பசி எடுக்கும்.
சுக்கு கலந்த வெந்நீரும் வயிற்றுக்கு நல்லது. 
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டாலும் வாயுவால் உருவாகும் வயிற்று வலி குணமாகும்
தினசரி சீரகத் தண்ணீர் குடித்து வந்தாலும் வாயுதொல்லையிலிருந்து விடுபடலாம்.