வானுயர விஜய் கட்-அவுட் சரிந்து விழுந்தது: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

வானுயர விஜய் கட்-அவுட் சரிந்து விழுந்தது: ரசிகர்கள் அதிர்ச்சி!

கேரளாவில் நடிகர் விஜய்க்கு அமைக்கப்பட்டிருந்த வானுயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொல்லம்: கேரளாவில் நடிகர் விஜய்க்கு அமைக்கப்பட்டிருந்த வானுயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல சிக்கல்களுக்குப் பின் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இப்படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் விஜய்க்கு பெருமளவில் இருக்கின்றனர். குறிப்பாக, கேரளாவின் ‘கொல்லம் நண்பன்ஸ்’ என்ற விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள், விஜய்க்கு சுமார் 175 அடியில் பிரம்மாண்டமாக கட்-அவுட் அமைத்திருந்தனர். அதை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அந்த கட்-அவுட் தற்போது சரிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விவகாரம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.