வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ? டிடிவி தினகரன் கிண்டல்

 

வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ? டிடிவி தினகரன் கிண்டல்

வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ என மக்கள் பேசி வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ என மக்கள் பேசி வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய  2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கை சமீபத்தில் வானிலை ஆய்வு மையத்தால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் மழையை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தது ஏற்புடையது இல்லை இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்ற ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் டெபாசிட் போய்விடுமோ என்ற பயத்தில் ஆளுங்கட்சி இருக்கிறது. இதனால்தான் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும்  வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ? என மக்கள் பரவலாக பேசி வருகின்றனர் என்றார்.