வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா! பிக்பாஸ் பற்றி பிரபல நடிகரின் ட்வீட்!

 

வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா! பிக்பாஸ் பற்றி பிரபல நடிகரின் ட்வீட்!

பிக்பாஸ் வீடு சீசன் 3ல் களை கட்டியுள்ளது. ஓவியா ஆர்மியும், ஜல்லிக்கட்டு ஜூலியும் செய்யாத சேட்டைகளை எல்லாம் ஒற்றை ஆளாக ரகளை செய்து டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே கலவர காடாக தான் மாறியுள்ளது.

vanitha

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது வைல்ட் கார்ட் என்ரீயாக வருகை தந்துள்ளார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வனிதா, முதலில் அபிராமி இடையே சண்டையை இழுத்து விட்டார். தற்போது, கவின் மீது தனது கண்ணை வைத்த வனிதா, கவினுடன் வம்பு இழுத்து வருகிறார்.

இந்நிலையில்,  பிரபல காமெடி நடிகரான சதீஷ், வைல்ட் கார்டுல வனிதாவை வெளிய அனுப்ப முடியுமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கேள்விக்கு பலரும், ‘வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா’ என வனிதா குறித்து மிகவும் மோசமான கமெண்ட்களைச் செய்து வருகின்றனர்.