வாதாடும் வக்கீலுக்கே பணம் தராமல் சீட்டிங்…முன் ஜாமின் கேட்டு அலறும் பவர் ஸ்டார் சீனிவாசன்…

வாதாடும் வக்கீலுக்கே பணம் தராமல் சீட்டிங்…முன் ஜாமின் கேட்டு அலறும் பவர் ஸ்டார் சீனிவாசன்…

படங்களில் நடிக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் போன நிலையிலும் தனது தில்லாலங்கடி வேலைகளால் எப்போதும் செய்திகளில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் ஒரு வழக்கில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

powerstar srinivasan

சும்மாவே நம்ம ஊர் கோர்ட்டுகள் பல விசித்திரமான் வழக்குகளை சந்தித்துவரும் நிலையில், ‘அவரது வழக்குக்காக வாதாடிய எனக்கு சம்பளமும் தராமல் பணம் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கிறார் மை லார்ட்’ என்று பவர்ஸ்டார் சீனிவாசன் மீது அவரது வக்கீல் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில்தான் தனக்கு முன் ஜாமின் கேட்டு ஆஜராகியிருக்கிறார் பவர் ஸ்டார்.

powerstar srinivasan

அவர் அனுப்பியுள்ள அந்த மனுவில், ‘திருச்சியை சேர்ந்த வக்கீல் பாண்டி என்பவர் என் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருவதாகவும், இதற்கான கட்டணத்தை அவர் கேட்டதற்கு நான் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கூறும் வழக்கில் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு வக்கீல் ஆஜராகி வருகிறார். அதற்கான கட்டணத்தையும் நான் முறையாக செலுத்தி வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வக்கீல் பாண்டி புகார் அளித்துள்ளார். 

powerstar srinivasan

இதில் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனுதாக்கல் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் என் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. தற்போது மணப்பாறை போலீசார் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பவர் ஸ்டாருக்கு  முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.