வாணி போஜன் காட்டில் பெய்யும் அடை மழை! 

 

வாணி போஜன் காட்டில் பெய்யும் அடை மழை! 

நடிகை வாணி போஜானுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

சென்னை: நடிகை வாணி போஜானுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ள ‘N4’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மைக்கேல் தங்கதுரை ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து அனுபமா குமார், அபிஷேக் ஷங்கர், வடிவுக்கரசி, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அஃப்சல் ஹமீது, வினுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் தருண் பாஸ்கர் நடிக்க குறும்பட இயக்குனர் சமீர் இந்த படத்தை இயக்குகிறார்.  இந்த நிலையில் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி அவரின் அடுத்த படத்தை நிரோஜன் என்பர் இயக்கவுள்ளாராம். அதுமட்டுமின்றி இவருடன் 90ml படத்தில் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.