வாட்ஸ் அப்பில் தேர்தல் விதிமீறல்! இதெல்லாம் கேட்க மாட்டீங்களா தேர்தல் ஆணையம்…! என்னங்க சார் உங்க சட்டம்?

 

வாட்ஸ் அப்பில் தேர்தல் விதிமீறல்! இதெல்லாம் கேட்க மாட்டீங்களா தேர்தல் ஆணையம்…! என்னங்க சார் உங்க சட்டம்?

நடப்பு மக்களவைத்  தேர்தலில் பரப்புரை தகவல்கள் வாக்காளர்களுக்கு அனுப்ப வாட்ஸ் அப் செயலியின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடப்பு மக்களவைத்  தேர்தலில் பரப்புரை தகவல்கள் வாக்காளர்களுக்கு அனுப்ப வாட்ஸ் அப் செயலியின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஒரே நேரத்தில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மேல் பகிரமுடியுமா என்றால் முடியாது என வாட்ஸ் அப் நிறுவனம் பதிலளிக்கும். ஆனால் நடைபெற்‌‌றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் பரப்புரை தொடர்பான தகவல்கள் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனர்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

whatsapp

வாட்ஸ் அப் செயலி வழியே பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க, ஐந்து பயனர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஒரு தகவல் பகிர்ந்துகொள்ளும் முறை அமலில் உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் உண்மை அது இல்லை.  வாட்ஸ் அப் உருவத்திலிருக்கு வாட்ஸ் அப் ஜிபி, வாட்ஸ் பிளஸ் மற்றும் ஜேடி வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் மூலம் ஏராளமான பயனர்களுக்கு Vote for bjp, vote for congress என்ற வாக்கு சேகரிப்பு சூடாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த வாட்ஸ் அப் பரப்புரைக்கு தடைகளும் இல்லை, தடங்கல்களும் இல்லை. இளம் வாக்காளர்களை குறிவைத்தே இந்த வாட்ஸ் அப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற பரப்புரைகளை பார்த்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டிருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்…

campaign

வாக்குகளுக்காக விதிகளை மீறும் வாட்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை இவ்வளவுதான் என சைபர் கிரைம் நிபுணர்கள் கொந்தளிக்கின்றனர். தகவல் அனுப்பும் முறையின் கட்டுப்பாடு இரு கண் துடைப்பாகவே பார்க்கப்படுகிறது. 

BUSINESS SENDER என்ற சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்துகொண்டு அதன் வழியே வாட்ஸ் அப் செயலியில் இதுபோன்ற விதி மீறல்கள் அறங்கேறி வருகிறது. ஆனால் இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வாய்திறக்கவில்லை… தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை… இதற்கு வாட்ஸ் அப் பயனாளர்கள் வாய்ப்புக்கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..!