வாட்ஸ்அப் மொபைல் செயலியில் டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

 

வாட்ஸ்அப் மொபைல் செயலியில் டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

வாட்ஸ்அப் மொபைல் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன்களில் டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

டெல்லி: வாட்ஸ்அப் மொபைல் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன்களில் டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

ஓராண்டுக்கும் மேலாக ஐ.ஓ.எஸ் வெர்ஷன் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அது முடிவை எட்டியுள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் மொபைல் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன்களில் டார்க் மோட் அம்சத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. முழுமையான கருப்பு நிறம் போல இல்லாமல் சற்றே சாம்பல் நிறத்தில் இந்த டார்க் மோட் வாட்ஸ்அப் செயலியில் செயல்படுகிறது.

ttn

அதனால் சாட் பாக்ஸ் அடர் நிறத்தில் பேக்கிரவுண்டு கொண்டிருக்கிறது. குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாத நிறங்களை டார்க் மோடில் வழங்க முடிவு செய்யப்பட்டு இவ்வாறு நிறத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தினை சிஸ்டம் செட்டிங்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கும் முந்தைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் “வாட்ஸ்அப் செட்டிங் — சாட்ஸ் — தீம் – டார்க்” என்ற வரிசையில் ஆப்ஷன்களை க்ளிக் செய்து டார்க் மோட் அம்சத்தை வாட்ஸ்அப்பில் செயல்படுத்தலாம்.