வாட்ஸ்அப் போன்றே ஃபேஸ்புக் மெசஞ்சரில் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

 

வாட்ஸ்அப் போன்றே ஃபேஸ்புக் மெசஞ்சரில் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றுள்ளது போன்று ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றுள்ளது போன்று ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பவும், சாட்டிங் செய்யவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் போன்ற பல்வேறு ஆப்கள் பயன்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் தவறுதலாக தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதும் உண்டு. இதை தவிர்க்கும் நோக்கில் மெசேஜ்களை அனுப்பிய பிறகும் அதை டெலீட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அதே அம்சம் ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தவறுதலாக அனுப்பிய மெசேஜை Remove for you அல்லது Remove for Everyone ஆகிய அம்சங்கள் மூலம் அழிக்க முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே மெசேஜ்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய மெசேஜை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்தால் அது மற்றவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பே அழிந்து விடும். மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.