வாட்ஸ்அப் சாட்டிங் செய்து கொண்டே பஸ் ஓட்டிய அரசு ஓட்டுநர்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

 

வாட்ஸ்அப் சாட்டிங் செய்து கொண்டே பஸ் ஓட்டிய அரசு ஓட்டுநர்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

செல்போனை  பார்த்துக்கொண்டே பேருந்து ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் சாட்டிங் செய்து கொண்டே பஸ் ஓட்டிய அரசு ஓட்டுநர்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை: செல்போனை  பார்த்துக்கொண்டே பேருந்து ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் அரசு பேருந்து  ஓட்டுநர் மூக்கையா, 50 பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது அவர் தனது இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்தபடி  வலது கையில் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்துள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் பயணித்துள்ளனர். 

அப்போது பயணி ஒருவர், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சமூக வலைதளங்களை பார்த்துக்கொண்டே ஓட்டிச்சென்றதை, செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில்  பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை  நடத்திய அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆறுமுகம், ஓட்டுநர் மூக்கையா என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

whatsapp

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால்  விபத்துகள் ஏற்படும் என்று போலீசார் எச்சரித்து வரும் நிலையில், அரசு பேருந்து ஓட்டுநரே  இதுபோன்ற செயல் செயலில் ஈடுபட்டுள்ளது  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.