வாட்ஸ்அப் கொரோனா வதந்தியால் நஷ்டம் – கறிக்கோழி, முட்டை விலை வரலாறு காணாத குறைவு

 

வாட்ஸ்அப் கொரோனா வதந்தியால் நஷ்டம் – கறிக்கோழி, முட்டை விலை வரலாறு காணாத குறைவு

வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புபவர்களால் முட்டை, கறிக்கோழி விற்பனை குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாமக்கல்: வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புபவர்களால் முட்டை, கறிக்கோழி விற்பனை குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலமாக பரவுவதாகவும், அதனால் யாரும் சிக்கன் சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ்அப்பில் சில நாட்களாக வதந்தி தகவல்கள் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

ttn

இந்த நிலையில், நாமக்கல்லில் 2-வது நாளாக நடைபெற்ற கோழிப்பண்ணையாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோடிக்கணக்கில் தேங்கியுள்ள முட்டைகளை எவ்வாறு விற்பனை செய்வது, அரசிடம் என்ன மாதிரியான உதவிகளை பெறுவது போன்ற விஷயங்கள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய கொரோனா வதந்தியால் கறிக்கோழி விற்பனை குறைந்து வாரத்துக்கு 15 கோடி ரூபாய் இழப்பும், முட்டை விற்பனை குறைந்து தினசரி 8 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களாலேயே இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் வர்த்தக சங்க தலைவர் வாங்கிலி சுப்பிரமணி கூறினார்.