வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் விரல்ரேகை அங்கீகார வசதி அறிமுகம்

 

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் விரல்ரேகை அங்கீகார வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் விரல்ரேகை அங்கீகார வசதி (Fingerprint Authentication) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டெல்லி: வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் விரல்ரேகை அங்கீகார வசதி (Fingerprint Authentication) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் எந்தவொரு புதிய அப்டேட்டை வழங்குவதற்கு முன்பும் அதை பீட்டா பதிப்பில் பரிசோதித்து பார்க்கும். அந்த வகையில் தற்போது புதிய அம்சம் ஒன்றை பரிசோதித்து வருகிறது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் நுழைவதற்கு முன்பு விரல்ரேகை மூலம் அங்கீகாரம் பெற்ற பிறகே செல்ல முடியும். இந்த அம்சம் Fingerprint Authentication என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளிகளின் தனிபட்ட அல்லது முக்கியமான குறுஞ்செய்திகளை பாதுகாக்க முடியும். உரியவரின் விரல்ரேகை அனுமதி இல்லாமல் வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைய முடியாது.

முன்னதாக வாட்ஸ்அப் ஐஓஎஸ் செயலிகளுக்கு ஃபேஸ் அன்லாக் செய்யும் முறை மற்றும் விரலால் தொட்டு அன்லாக் செய்யும் முறையை வாட்ஸ்அப் நிறுவனம் கண்டுபிடித்தது. அந்த அப்டேட் இன்னும் பரிசோதனையில் உள்ள நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்காக விரல்ரேகை பதியும் முறை கட்டமைத்து வரப்படுகிறது. இந்த தகவல்களை WABetaInfo என்னும் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் முதலில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலிக்கும், அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் ஐஓஎஸ் செயலிக்கும் பொருந்துமாறு செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.