வாட்சப்புக்கும் பசிக்கும்ல! இனிமே அங்கேயும் விளம்பரம்தான்

 

வாட்சப்புக்கும் பசிக்கும்ல! இனிமே அங்கேயும் விளம்பரம்தான்

ஒரு வருடத்திற்கு ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு டாலர் என்றால், ஃபேஸ்புக் செலவழித்த ஒண்ணேகால் லட்சம் கோடியை வசூலிக்க 25ஆம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டும். எனவே, இனிமேல் ஃபேஸ்புக் போல வாட்சப்பிலும் விளம்பரங்கள் வரவுள்ளன

வாட்சப் செயலி துவக்கப்பட்டு சரியாக பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு தோராயமாக ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாய்க்கு ஃபேஸ்புக் நிறுவனம் மொத்தமாக வாங்கியபோதுகூட, அங்கே பணியாற்றியது வெறும் 50 நபர்கள் மட்டுமே. ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தப்பட்டப்பிறகு, வாட்சப் நிறுவனர்கள் இருவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

துவங்கிய காலத்தில் இருந்து ஒரு விஷயத்தில் வாட்சப் நிறுவனர்கள் தெளிவாக இருந்தனர். அது, தங்கள் செயலியில் விளம்பரங்கள் எந்த வடிவத்திலும் வெளிவரக்கூடாது என்பது. நிறுவனத்தின் செயல்பாட்டு செலவீனங்களுக்காக குறைந்தபட்ச தொகையாக வருடத்திற்கு ஒரு அமெரிக்க டாலரையும் சில நாடுகளில் வசூலித்து வந்தார்கள். ஃபேஸ்புக் கைக்கு வாட்சப் சென்றபின், இந்த ஒரு டாலர் சந்தாவும் நிறுத்தப்பட்டது.

Whatsapp Ads

அடடா, மார்க் அவ்வளவு நல்லவரா என நினைக்கவேண்டாம். ஒரு வருடத்திற்கு ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு டாலர் என்றால், ஃபேஸ்புக் செலவழித்த ஒண்ணேகால் லட்சம் கோடியை வசூலிக்க 25ஆம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டும். எனவே, இனிமேல் ஃபேஸ்புக் போல வாட்சப்பிலும் விளம்பரங்கள் வரவுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக், விளம்பரங்கள் அடுத்த ஆண்டில் இருந்து வாட்சப்பில் வலம் வரத்துவங்கும் என்று தெரிவித்துள்ளது.