‘வாடா போடா’னு தான் பேசுவன்’: சேரன் மானத்தைக் காற்றில் பறக்க விட்ட சரவணன்! 

 

‘வாடா போடா’னு தான் பேசுவன்’: சேரன் மானத்தைக் காற்றில் பறக்க விட்ட சரவணன்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3யில் கடந்த ஒரு வாரமாகப் போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ் மேட்ஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் அடிப்படையில் வேடமிட்டு நடனம் ஆடினர். வனிதா, மீரா வெளியேறிய பிறகு பிக் பாஸ் கண்டெண்ட் இல்லாமல் சாக்ஷி, கவின் காதலையே காண்பித்துக் கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் அந்த டாஸ்க் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. டாஸ்க் முடிந்த பிறகு சரியாக விளையாடாத இரண்டு நபரை ஹவுஸ் மேட்ஸ் ஒருமனதாகத் தேர்வு செய்து சிறைக்கு அனுப்புவார்கள். அதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

 

அதில் சேரன், ‘சரவணன் விஜயகாந்த் போல் நடந்து கொள்ளவில்லை. நடனம் மட்டுமே அவரை போல் ஆடினார். மற்ற சமயத்தில் அவரை போலவே தான் நடந்து கொண்டார்’ என்று கூறினார். இதனால் கடுப்பான சரவணன், ‘நீங்க கூட தான் ரஜினிகாந்த் போல உடை அணிந்து கொண்டு காமெடி பண்ணிக்கிட்டு இருந்திங்க. அவர் என்ன சொல்ல வராரு என்பதைச் சரியாகச் சொல்ல சொல்லு யா… நான் அப்படி தான் டா பேசுவன்..பேசாம உங்க வேலையை பாரு டா.. நீங்க என்ன சொல்ல வரிங்க’ என்று மிகவும் ஆவேசமாகக் கூறுகிறார்.