‘வாடகை கொடு, இல்லையென்றால் வீட்டை கொடு’- வேலையில்லாமல் சாலைக்கு போகும் அவலம் -அரசு உத்தரவால் அதிர்ச்சி ..  

 

‘வாடகை கொடு, இல்லையென்றால் வீட்டை கொடு’- வேலையில்லாமல் சாலைக்கு போகும் அவலம் -அரசு உத்தரவால் அதிர்ச்சி ..  

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே மரத்தஹள்ளி பகுதியில் கிருஷ்ணா என்பவரின் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கும் ஜோசப் என்ற 40 வயதான மென்பொருள் பொறியாளர் குடியிருப்பு உரிமையாளர் தன்னிடம் வாடகையை வாங்கிக்கொண்டு இந்த ஊரடங்கு நேரத்தில் காலி செய்ய சொல்வதாக புகார் கொடுத்துள்ளார்.

மரத்தஹள்ளி பகுதியில் ஒரு பேயிங் கெஸ்ட் நடத்துபவர் கிருஷ்ணா. அவரது குடியிருப்பில் 40 க்கும் மேற்பட்டவர்கள் வாடகைக்கு வசிக்கின்றனர். இப்போது கொரானாவால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் பெரும்பாலோனோர் சொந்த ஊருக்கு போய் விட்டனர்.ஆனால் ஜோசப் என்பவரும் வேறு சிலரும் மட்டுமே அங்கு தற்போது இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு யாரிடமும் வாடகை வாங்க கூடாது என்று சொல்லியும், உரிமையாளர் கிருஷ்ணா அனைவரிடமும் இந்த மாதம் முதல் தேதி வாடகையினை வாங்கிக்கொண்டு ,வீட்டை காலி செய்ய சொல்லி  கொடுமைப்படுத்தினார்.மீறினால் மின்சாரம், தண்ணீரை துண்டித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் கிருஷ்ணா மீது போலீசில் புகாரளித்தனர். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.